கால்வாய் அடைப்பால் விளைநிலங்களில் புகுந்த வெள்ளம்: பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தென்காசி அருகே கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் விளை நிலங்களில் புகுந்த வெள்ள நீர். குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.

Update: 2021-12-01 11:33 GMT

மத்தளம்பாறை பகுதிகளில் நெல் நாற்று நட்டு 5 தினங்கள் ஆகிய நிலையில் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி உள்ளது.

பழைய குற்றாலத்தில் இருந்து அருதன்குளத்திற்கு செல்லும் நீரில் ஏற்பட்ட அடைப்பால் விளை நிலங்களில் புகுந்த வெள்ள நீர்.குளம் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு மழை சற்று குறைந்த நிலையில் மீண்டும் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்தில் குளங்கள் நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில் குற்றாலம் பேரருவியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பழைய குற்றால அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலத்தில் இருந்து செண்பகராமபேரி குளம், மத்தளம்பாறை குளம், செங்குளம், மருதன்குளம் உள்ளிட்ட 28 குளங்கள் மூலம் சுமார் 1500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் அருதன்குளத்திற்கு வரும் நீரில் ஏற்பட்ட அடைப்பால் மத்தளம்பாறை அருகே உள்ள கண்டமங்கலம்விலக்கு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளிலும் விளைநிலங்களும் புகுந்தது.

மத்தளம்பாறை பகுதிகளில் நெல் நாற்று நட்டு 5 தினங்கள் ஆகிய நிலையில் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு செய்து செய்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News