விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

சுரண்டையில்

Update: 2021-05-12 07:59 GMT

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் சுரண்டை பகுதியில் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் சிவனுபெருமாள், சுரண்டை பஞ்.செயல் அலுவலர் வெங்கட கோபு, சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நிலையில் குழு அமைத்து சுரண்டை பஜாரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது கடைகளை மூட வேண்டிய நேரமான நண்பகல் 12:00 - கடந்தும் கடைகளை மூடாமல் திறந்து வைத்து வியாபார செய்தது கண்டறியப்பட்டு இதனை தொடர்ந்து விதிகளை மீறிய இரண்டு மளிகை கடைகளுக்கு தலா 500 வீதம் ரூ.1000/- அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது

தொடர்ந்து வியாபாரிகளிடம் பேசிய வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், வியாபாரிகள் ஊரடங்கு சமயத்தில் அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News