டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள்: தென்காசியில் இலவச மருத்துவ முகாம்

தென்காசியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2021-10-15 07:32 GMT

தென்காசியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு மறைந்த முன்னாள் குடியரசுத் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு அப்துல்கலாம் நற்பணி மன்றம் மற்றும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கும் முகமும், ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கொரோன தடுப்பூசி முகாமும் நடைபெற்றது. தென்காசி மெடிக்கல் லோன் சார்பில் இலவச ரத்த அழுத்த நீரழிவு நோய் கண்டறியும் முகாமும் நடத்தப்பட்டது

இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் முகமது இப்ராஹிம் தென்காசி அரசு சித்த மருத்துவர் செல்வகணேஷ் மற்றும் ஞான பொன்மலர். உஷா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வின் போது ஏராளமான பொதுமக்களுக்கு தடுப்பூசி மற்றும் கபசுர குடிநீர் மற்றும் கொரோன நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது

Tags:    

Similar News