தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா: பாஜக மாலை அணிவித்து மரியாதை

ஜன சங்கத்தின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது

Update: 2021-09-25 17:00 GMT

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜன சங்கத்தின் ஸ்தாபன தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா உருவப்படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது 

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜன சங்கத்தின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் 105 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின  உருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில்,  மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மண்டல் பார்வையாளர் ஆனந்தி முருகன், நகர பொதுச்செயலாளர்கள் நாராயணமூர்த்தி, ராஜ்குமார்,  நகரப் பொருளாளர் சேகர் நகர துணைத் தலைவர்கள் மந்திரமூர்த்தி, கருப்பசாமி நகர செயலாளர் ராமச்சந்திரன், பாலாஜி, ராணுவ அணி  ராமச்சந்திரன்,   87 வது கிளை தலைவர் ராஜசேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News