பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு.

Update: 2021-12-25 01:23 GMT

தென்காசி தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு(IUCAW) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன்  நேற்று தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் தங்களுக்கு பள்ளியிலோ வெளியிலோ எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் தெரிவிக்க வேண்டும் எனவும், முன்பின் தெரியாத நபர்களிடம் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் பேச வேண்டாம் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதேபோல் தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் காவல் துறையினர் இணைந்து புல்லுக்காட்டு வலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்றால் புகார் அளிக்கும் தொடர்பு எண் (1098,181,14417,155260) மற்றும் ஆபத்து நேரத்தில் காவல்துறையினரின் உதவியை பெற உதவும் காவலன் செயலி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News