தென்காசியில் கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-15 07:54 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் நல சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான பொருட்களான மணல், எம்.சாண்ட் ஜல்லி, குண்டு கற்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்கள் தடைசெய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்ட குவாரிகளை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான தொழிளர்களுக்கு தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News