விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு செயற்கை கால் வழங்கிய ஆட்சியர்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

Update: 2022-06-20 16:30 GMT

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட இளைஞருக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்டத்தில் 4-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் முதல் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து வந்தனர். இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விபத்தில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்ணன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயற்கைக் கால் பொருத்துவதற்கு உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை ஏற்று அவருக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று செயற்கை கால்களை வழங்கினார். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திலேயே வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News