நகராட்சி முறைகேட்டை கண்டித்து நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணா

நகராட்சி முறைகேட்டை கண்டித்து நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணா செய்தனர்

Update: 2024-02-01 13:20 GMT
பட விளக்கம்: நகர மன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தென்காசியில் இலவச கழிப்பிடத்தில் முறைகேடை கையாளும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் தென்காசிக்கு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 43 கட்டண கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்களை இலவச கட்டண கலிப்பிடங்கள் இருந்தும் பயன்பாட்டுக்கு வராமல் கட்டண கழிப்பிடங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இலவச கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றி ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள் ஆகியோர் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாஜக கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் கூறுகையில், தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா பாரதத் திட்டத்தின் கீழ் இலவச கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகியும் அது திறக்கப்படாமல் உள்ள நிலையில் கட்டண கழிப்பிடமாக மாற்றுவதற்கு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்களில் இலவச கழிப்பிடங்கள் திறக்கப்படாமல் நகராட்சி நிர்வாகம் முறைகேடாக செயல்பட்டு வருகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

Tags:    

Similar News