தென்காசியில் திடீரென தீப்பிடித்த கார்.. தீயணைப்புத் துறையால் பெரும் விபத்து தவிர்ப்பு

தென்காசியில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

Update: 2022-04-04 11:56 GMT

காரில் பற்றிய தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

தென்காசி மாவட்டம், வீரசிகாமணி அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலவன். இவருடைய ஆம்னி காரை அவரது நண்பர் சுதாகர் என்பவர் உறவினரை தென்காசி ஆர்த்தி ஸ்கேன் ஸ்கேன் எடுப்பதற்கு அழைத்து வந்தார். ஸ்கேன் சென்டர் அருகே வந்தபோது அவர்களை இறக்கி விட்ட பிறகு காரிலிருந்து கரும்புகை கிளம்பியது உடனே அருகிலிருந்த போக்குவரத்து காவலர் தென்காசி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.

உடனே தென்காசி நிலை அலுவலர் ரமேஷ் சிறப்பு நிலை அலுவலர் கணேசன் வீரர்கள் ராஜ்குமார் வேல்முருகன் சுந்தர் ஜெகதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பான் மற்றும் தண்ணீர் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து பெரிய சேதத்தை தவித்தனர்.

இதில் எல்பிஜி சிலிண்டர் கேஸ் மூலம் இயங்கும் வசதியும் உள்ளது சிறிதும் தாமதித்திருந்தால் சிலிண்டர் வெடித்து பெரிய அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. தீயணைப்பு துறை விரைந்து செயல்பட்டு அதன்மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News