அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் பிரசாரம்

Campaign by Udayanithi Stalin council to enroll in government school

Update: 2022-06-22 14:00 GMT

பள்ளி குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், மாணவர்கள் பேரூந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பதற்காகவும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடங்கினர்.

பள்ளி குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், மாணவர்கள் பேரூந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பதற்காகவும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடங்கினர்.

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டும், அரசு பள்ளிகளில் உள்ள கணினி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு, உயர்கல்வி பயில மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 என தமிழக அரசு கல்விக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

இது மாதிரியான கல்விச் சலுகைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேரூந்தின் படிக்கட்டில் நின்றும், தொங்கியவாறும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனை தடுப்பதற்காகவும் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக கல்விச் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி இப்பணியை தொடங்கினர். நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம்துரை கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, தென்காசி ஒன்றிய தலைவர் வசந்தகுமார் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அருணன் சிவபத்மநாதன், காசிதர்மம் துரை, செண்பகநல்லூர் கண்ணன், கழக முன்னோடி பெட்டி முருகையா மற்றும் மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News