பாவூர்சத்திரத்தில் நவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள்

பாவூர்சத்திரத்தில் நவராத்திரியை முன்னிட்டு மாணவர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2021-10-16 03:57 GMT

சென்னை மற்றும் பாவூர்சத்திரத்தில் உள்ள நட்சத்திரா கல்சுரல் அகாடமி சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக இரண்டரை வயது முதல் 30 வயதிற்கு மேற்பட்டோர் வரை பரதநாட்டியக் கலை பயின்று வருகின்றனர்.

இந்த அகாடமி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு கோவில்களில் நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் மற்றும் வென்னிமலை முருகன் கோவிலிலும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவிகள் ஆண்டாள் பாடல், முருகர் பாடல், விநாயகர், சிவதாண்டவம், சிவன் பாடல்கள் மற்றும் கிருஷ்ணர் பாடல்களுக்கு நடனம் ஆடினர். நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பாவூர்சத்திரத்தில் வென்னிமலை முருகன் கோவில் அமைக்கப்பட்டிருந்த நவராத்திரி கொலு முன்பு பெண்கள் அமர்ந்து பஜனை செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News