கனமழை தொடர்ந்து பெய்வதால் குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை

Courtallam Waterfalls- கனமழை தொடர்ந்து பெய்வதால் குற்றாலம் அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-04 09:05 GMT

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Courtallam Waterfalls- தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் என மாவட்டம் முழுவதும் இடைவிடாது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. . குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதமான காலநிலையும், ரம்மியமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News