கீழப்புலியூரில் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு

தென்காசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு.

Update: 2022-01-04 14:00 GMT

கீழப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தென்காசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு.

தென்காசி மாவட்டம், சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (04/01/2022) சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கீழப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே இணையதளம் மூலமாக நடைபெற்று வரும் குற்றங்களான போலியாக செயலிகளை (App) உருவாக்கி அதன் மூலம் பாமர மக்கள்களுக்கு ஆசைகளை உருவாக்கி மாய வலையில் சிக்க வைப்பது தொடர்பாகவும், இதுபோன்ற பல்வேறு போலியான செயலிகள்( Power Bank, Fundamelon, colour Trading, Etc.,) மூலம் ஏற்படுத்தபடும் பண மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 155260 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News