சுரண்டை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயண பேரணி கன்னியாகுமரியில் துவங்கி நேற்று காஷ்மீரில் முடிவடைந்தது

Update: 2023-01-31 05:45 GMT

சுரண்டை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டார் 

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயண பேரணி கன்னியாகுமரியில் துவங்கி நேற்று காஷ்மீரில் முடிவடைந்தது. பின்னர் அங்கு உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடியினை ஏற்றி பேரணியை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் தங்களது பகுதியில் கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா பேரணி நடந்தது. பேரணிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார்

அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து முப்பிடாதி அம்மன் கோயில் அருகே தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ்‌ பழனி நாடார், மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வெற்றி விழா கொடி கம்பத்தில் கொடியேற்றினார்.தொடர்ந்து காமராஜர் சிலைக்கு நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால்த்துரை, மாவட்ட துணை தலைவர் பால் எ சண்முகம், கவுன்சிலர்கள் பட்டுமுத்து தெய்வேந்திரன், வெயிலுமுத்து, பாலசுப்பிரமணியன், உஷா பிரபு, ஊடக பிரிவு சிங்கராஜ், மற்றும் சமுத்திரம், பரமசிவன், செல்வன், வாட்டர் மாரியப்பன், தபேந்திரன், சங்கர், கணேசன், அருணாசலம், பொன்ராஜ், டேவிட் ஜெபராஜ், சுரேஷ், கந்தையா, ஜெயசந்திரன், ஆனந்த், காந்திராஜ், பரமசிவம், ராஜா, டுவின்ஸ் முருகேசன், கோட்டூர் சாமி, மகேஷ், மாரி செல்வராஜ், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News