குற்றால அருவியில் குளிக்க அனுமதி

Courtallam News Today -குற்றால அருவியில் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

Update: 2022-11-14 03:02 GMT

குற்றால அருகில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளிக்கும் காட்சி.

Courtallam News Today -தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையம், குற்றாலம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி என மாவட்டம் முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்தது. குற்றால பிரதான அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்தருவி, சிற்றருவி, குற்றாலம் பிரதான அருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும், நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து இதமான கால நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

தொடர்மழையால் நிரம்பும் அணைகள்

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழையளவு குறித்த தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இன்று தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா 

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 68.80 அடி

கொள்ளளவு: 170.85 மி.க.அடி

நீர் வரத்து : 133.00 கன அடி

வெளியேற்றம் : 60.00 கன அடி

ராம நதி 

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 69.75 அடி

கொள்ளளவு: 68.00 மி.க.அடி

நீர்வரத்து : 58.40 கன அடி

வெளியேற்றம் : 40.00 கன அடி

கருப்பா நதி

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 51.51 அடி

கொள்ளளவு: 48.54 மி.க.அடி

நீர் வரத்து : 35.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

கொள்ளளவு:18.43 மி.க.அடி

நீர் வரத்து: 30.00 கன அடி

வெளியேற்றம்: 30.00 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 81.50 அடி

கொள்ளளவு: 61.45 மி.க.அடி

நீர் வரத்து : 35.00 கன அடி

வெளியேற்றம்: 35.00 கன அடி

மழை அளவு

செங்கோட்டை:1.00 மி.மீ

சிவகிரி:2.00 மி.மீ

தென்காசி:2.00 மி.மீ

கடனா:18.00 மி.மீ

ராம நதி:28.00 மி.மீ

கருப்பா நதி:5.00 மி.மீ

குண்டாறு:1.40 மி.மீ

அடவிநயினார்:3.00 மி.மீ



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News