2 நாட்களுக்குப் பின் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

Courtallam Waterfalls- 2 நாட்களுக்குப் பின் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-29 04:11 GMT
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்.

Courtallam Waterfalls- தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது பருவநிலை நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் திடீரென குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஐந்து பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் சேர்ந்து மூன்று பேரை மீட்டனர்.

இரண்டு பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். இதனைத் தொடர்ந்து குற்றால அருவியில் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தடை விதித்தார்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை அளவு குறைந்தது தொடர்ந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வைத்து குறைய தொடங்கியது. இந்நிலையில் இன்று குற்றால அருகில் குறிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News