NIA  அதிகாரிகளின்  சோதனையை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்ற 25 பேர் கைது

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாதேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் அதிகாலை 3 மணி முதல் தீவிர சோதனை

Update: 2022-09-22 05:30 GMT

 செங்கோட்டை தாலுகாவில் உள்ள பண்பொழி கிராமத்தில் வசித்து வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் இன்று அதிகாலை 3 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவில் உள்ள பண்பொழி கிராமத்தில் வசித்து வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் இன்று அதிகாலை 3 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர் பாப்புலர் பிரண்ட் அமைப்பில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய குழு உறுப்பினராக உள்ளார். அவ்வப்போது பண்பொழி வீட்டிற்கு வந்து செல்வார் இன்றைய சோதனையின் போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் அதிகாலை வந்த 30 க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது வீட்டில் அவரது தந்தை, சகோதரர் மற்றும் மனைவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, இவரது வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது தேசிய புலனாய்வு முகமையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சோதனையின் போது, சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் பிரச்னை செய்ய கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில்பதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்புடன் 30க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு கூடிய பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் இதனை அடுத்து 25 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

Tags:    

Similar News