சங்கரன்கோவில் தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்கு பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

Update: 2021-03-27 17:36 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் 274 வாக்குச் சாவடிகள்,91 துணை வாக்குச் சாவடிகள் என மொத்தம் 365 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன..

வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களான 438 கண்ட்ரோல் யூனிட் பேலட் இயந்திரங்கள் மற்றும் 478 விவிபேட் இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

சில் வைக்கப்பட்டிருந்த அறையை கோட்டாட்சியர் முருகசெல்லி அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்தார்.

இதைத்தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக அலுவலகத்தில் மண்டல துணை தேர்தல் அலுவலர் உள்ளிட்ட தலா 3 பேர் வீதம் 27 மேசைகள் போடப்பட்டு சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அலுவலர் முருகசெல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மாரியப்பன் மற்றும் திமுக சார்பில் நகரச் செயலாளா சங்கரன், வழக்குரைஞர் அன்புச்செல்வன், போ.சங்கர், அமமுக சார்பில் வைரமுத்து, உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சின்னம் பொருத்தும் பணியை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News