காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

4 வருடங்களாக குடிநீர் இன்றி தவிக்கும் கிராமம்.

Update: 2021-02-10 17:10 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பட்டாடைகட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட சந்திரகிரி கிராம மக்கள் 4 வருடங்களுக்கு மேலாக குடிநீர் இன்றி தவித்து வந்த நிலையில் இன்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள பட்டாடை கட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சந்திரகிரி கிராமத்தில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போதிலும் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் இன்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேவையான குடிநீரை லாரி மூலம் 10 ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் பெற்று வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். தங்களுக்கு 4 வருடங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினார். இதுபற்றி அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளோம். கோரிக்கை இன்று வரை பரிசீலிக்கப்படவில்லை எனவும் இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டத்தோடு அரசு பேருந்தை சிறைபிடித்துள்ளனர்.

Similar News