சங்கரன்கோவில் ஒன்றியத்தில் பத்திரிகையாளர்களை அவமதித்த திட்ட இயக்குனர்

சங்கரன்கோவில் ஒன்றியத்தில் பத்திரிகையாளர்களை திட்ட இயக்குனர், திட்டமிட்டு அவமதித்தார். கேட்டிலேயே அனைவரையும் நிற்கவைத்தார்.

Update: 2021-10-22 08:38 GMT

சங்கரன் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்த செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் வாசலிலேயே நிறுத்தப்பட்டனர். இந்த செயலுக்கு திட்ட இயக்குனரே காரணம் என்று பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 12 இடங்களை திமுக பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றிய சேர்மன் பதவியை பெறுகிறது. சுயேச்சை வேட்பாளர்களாக மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக ஒரு இடத்திலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த 20ம் தேதி சங்கரன் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 1வது வார்டு சமுத்திரம், 3-வது வார்டு முத்துக்குமார், நாலாவது வார்டு சண்முகசுந்தரி, ஆறாவது வார்டு பார்வதி, ஏழாவது வார்டு தமிழ்ச்செல்வி, ஒன்பதாவது வார்டு செல்வி, 10-ஆவது வார்டு பரமகுரு, 11வது வார்டு ராமலட்சுமி, 12வது வார்டு சங்கரபாண்டியன், 13வது வார்டு முனியம்மாள், 15வது வார்டு ராமர், 17வது வார்டு வேலு தாய் ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்.

இரண்டாவது வார்டு தங்கச் செல்வி, 5-ஆவது வார்டு அமுதா, 16வது வார்டு கணேச புஷ்பா ஆகியோர் சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் 8வது வார்டு காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மேனகா சாந்தி 14 வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

20ம் தேி நடந்த பதவி ஏற்பு விழாவில் 2 திமுக கவுன்சிலர்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பதவி ஏற்கவிடவில்லை. 15 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றப்பின்பு 2 மணி நேரம் தமதமாக இரண்டு ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

இந்த செய்தி மறுநாள் அனைத்து நாளிதழ்களிலும் வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் நடந்த சேர்மேன் தேர்தலையொட்டி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை போலீசார் அலுவலக வளாகத்தில் கூட அனுமதிக்கவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் சென்ற போது போலீசார் அனுமதி இல்லை என தெரிவித்தனர்.

அலுவலக வளாக கேட்டில் பத்திரிக்கையாளர்கள்/ பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதை காண்பித்து போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.

ஆனால் மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய ஒன்றிய அலுவலகங்களில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்பின்போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக 2 திமுக உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுமார் 2 மணிநேரம் கழித்து பதவி பிரமாணம் செய்துவிவத்தார். இது தொடர்பான செய்தி நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.

இதனால் ஆத்திரமடைந்த திட்ட இயக்குனர் திட்டமிட்டு இவ்வாறான செயலை செய்துள்ளார். இந்த தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் செய்தியாளர்களை அனுமதித்த போது ஏன் இந்த ஒன்றியத்தில் அனுமதிக்கவில்லை.

சங்கரன் கோவில் ஒன்றியம் தனிநாடா, திட்ட இயக்குனர் சர்வ அதிகாரம் பெற்ற மாமன்னரா. தமிழக அரசும், மத்திய அரசும பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவோ நல்லதை செய்து வரும் போது இது போன்ற சில அதிகாரிகளால் அரசுக்கு மிகப் பெரிய கெட்ட பெயர் என்று மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திராவிடம் கேட்டதற்கு தேர்தல் நடத்து அலுவலரான திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.. பத்திரிகையாளர்களை அசிங்கப்படுத்திய திட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News