பள்ளி மாணவி தற்கொலை: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இரண்டாவது உடற்கூறாய்வு நடத்தும் குழுவில் தங்களுக்கு விருப்பமான மருத்துவரைச் சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

Update: 2022-07-19 07:32 GMT

உச்சநீதி மன்றம் ( பைல் படம்)

தமிழகத்தில் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவிருந்த இரண்டாவது உடற்கூறாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

பன்னிரண்டாம் வகுப்பு சிறுமியின் தந்தை, இரண்டாவது சுற்று உடற்கூறாய்வு நடத்தும் குழுவில் தங்களுக்கு விருப்பமான மருத்துவரை சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை நாளை விசாஉடற்கூறாய்வு செய்ய நேற்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ குழுவில் தங்களுக்கு விருப்பமான மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நிராகரித்தது.

எனவே மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இந்த விவகாரம் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. உயர்நீதிமன்றத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என கேள்வி எழுப்பினார்

வழக்கறிஞர் தடை விதிக்க வலியுறுத்தியபோது, ​​உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Tags:    

Similar News