பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: சிவகங்கை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

விறகுகளை திருடிச் சென்று விற்க முயன்றதை தட்டிக்கேட்ட சந்திராவை கடந்த 2012 ஆண்டு கொலை செய்தார்

Update: 2021-12-22 06:45 GMT

சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கிருபாலன்

பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை சிவகங்கை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே உள்ள வட விருக்கை கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா. இவரது மனைவி சந்திரா.  இவர்கள் வெட்டி வைத்திருந்த விறகுகளை, அதே பகுதியைச் சேர்ந்த கிருபாலன் என்பவர்  இவர்களுக்கு தெரியாமல் எடுத்துச் திருடிச்சென்று விற்க முயற்சித்துள்ளார்.   விறகுகளை திருடிச் சென்று விற்க முயன்றதை தட்டிக்கேட்ட சந்திராவை 2012 ஆண்டு கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை, சிவகங்கை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  சந்திராவை கொலை செய்த கிருபாலனுக்கு  7 வருட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிவகங்கை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்

Tags:    

Similar News