சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Update: 2022-03-14 13:15 GMT

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களை வாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனரெட்டி

ப.மதுசூதன் ரெட்டி.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்; மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி 11 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (14.03.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 11 பயனானிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் ரூ.55,000 மதிப்பீட்டில் வழங்கினார்.

மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் பெறும் வகையில், சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த 3 பயனாளிகளுக்கு முதியோர் ஒய்வூதியத்திற்கான பெறுவதற்கான ஆணையினையும், 4 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார். தொடர்ந்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு புதிய குடும்ப உறுப்பினர் அட்டைக்கான ஆணையினையும் வழங்கினார்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 335 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது. மனுக்கள் மீது கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.இரத்தினவேல், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News