திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளை மூடக் கோரிக்கை!

திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலில் தொடா்ந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.;

Update: 2025-02-18 07:30 GMT

சேலம்: திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலில் தொடா்ந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் தங்கராஜ் தலைமையில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள்

திருமணிமுத்தாறு பகுதியில் உள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அங்கு பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனா். இந்நிலையில், அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள டையிங் ஆலையில் அரசு அனுமதி வழங்கியும் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகின்றனா்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடா்ந்து சாயக்கழிவுநீரை வெளியேற்றுவதால் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வாய்க்காலில் வெளியேற்றும் ரசாயனக் கழிவுகளால் நிலத்தடி நீா்மட்டம், விவசாயக் கிணறுகள் முழுவதும் மாசு அடைந்து உள்ளது. இதனால் ஆடு, மாடுகள் தண்ணீரைக் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயிா்கள் சேதமாவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிா்வாகம் தனியாா் டையிங் ஆலை ரசாயன கழிவுகள் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

விவசாயிகள் பிரதிநிதிகளின் கோரிக்கை

  • டையிங் ஆலைகளின் சாயக்கழிவு நீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்ற கூடாது
  • விவசாயிகளின் வாய்க்கால் நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை தேவை
  • நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்க வேண்டும்
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க ஆலைகள் மீது கடும் நடவடிக்கை தேவை

மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு

விவசாய பகுதியில் இயங்கும் டையிங் ஆலைகளின் கழிவு நீரால் குடிநீர், நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News