கணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி எஸ்பியிடம் புகார்

இராணிப்பேட்டை அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனின் சாவில் சந்தேகம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனு

Update: 2021-07-03 10:14 GMT

கணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி எஸ்பியிடம் புகார்

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை, அருகே உள்ள தேவதானத்தைச்சேர்ந்த மல்லிகாவும், அவரது உறவினரானஅருகே உள்ள ரெண்டாடி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்த்த விஜயலிங்கமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு. கணவன் மனைவியுமாக சந்தோஷமாக  இருந்து வந்தனர்.

இந்நிலையில் விஜயலிங்கத்தின் மனைவி மல்லிகாவிடம் அவரது மாமியாரும், விஜயலிங்கத்தின். தாயாருமான கிருஷ்ணவேணி, வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் மனைவியுடன் விஜயலிங்கம் அவரது வீட்டிலேயே உள்ள ஒரு அறையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். 

இந்நிலையில் கடந்த மேமாதம்21ந்தேதி காலை விஜயலிங்கத்தின் தாயார் கிருஷ்ணவேணி,அவரது தம்பி,சண்முகராஜ்,மற்றும் அவரது சகோதரிகள் சேர்ந்து விஜயலிங்கத்திடம் பத்திரம் ஓன்றைக்காண்பித்து அதில் கையெழுத்து போடும்படி வற்புறுத்தியதாகவும் ,விஜயலிங்கம் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே,  தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே மல்லிகாவை அவரது தாய்வீட்டிற்கு செல்லும்படி விஜயலிங்கம் கூறியுள்ளார்.

 மறுநாள் காலை விஜயலிங்கம் இறந்து விட்டதாக மல்லிகாவிற்கு தகவல் தெரியவே அவர் அங்கு சென்று  கணவரது மரணம் குறித்து மல்லிகா கேட்டதற்கு கணவனின் தாயார், தம்பி ஆகியோர்  மல்லிகாவை  விரட்டியதாகக் கூறப்படுகிறது

அதனைத்தொடர்ந்து அவர் இராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை . இந்நிலையில்  கணவரின் இறப்பிற்கு காரணம் தெரியததால் மனமுடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்த போது உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில்  கணவர் விஜயலிங்கத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே புதைக்கப்பட்டுள்ள அவரது உடலைை மீீீீீ்ட்டு பிரேத பரிசோதனை செய்து நடவடிக்கையை எடுக்குமாறும் அதேநேரத்தில் அவரது கணவர் பெயரில் உள்ள சொத்தை மைத்தனர் சண்முகராஜ் பெயருக்கு எழுதித் தருமாறு  வற்புறுத்துவதாகவும் அதனால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ்மீனாவிடம் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News