பாலாறு அணைக்கட்டிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

வாலாஜாப்பேட்டை அருகே உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை வட்டாட்சியர் ஆனந்தன் ஆய்வு செய்தார்

Update: 2021-09-05 05:44 GMT

பாலாற்று அணைக்கட்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை வட்டாட்சியர் ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை ஆற்றில் இருந்து வரும் வெள்ளநீர் பாலாற்றில் கலந்துசெல்கிறது.  அந்த நீரானது வாலாஜாப்பேட்டை அருகே பாலாற்றில் உள்ள அணைக்கட்டிற்கு சுமார் மணிக்கு 2500 கன அடிக்கும் குறைவாக வந்து கொண்டிருக்கிறது.   இந்நிலையில் அங்கிருந்து மகேந்திரவாடி ஏரிக்கு 122 கன அடி, காவேரிப்பாக்கம் ஏரிக்கு 818 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 73 கனஅடி, தூசி ஏரிக்கு-409 கன அடி தண்ணீர் என ஏரிகளுக்குச் செல்லும் ஆற்றுக்கால்வாய்களில் திருப்பி விடப்பட்டுவருகிறது .

இதனை வாலாஜாபேட்டை வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News