குரோமியக்கழிவை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை: சீமான் குற்றச்சாட்டு

இராணிப்பேட்டை சிப்காட்டில் 2.5 லட்சம் டன் குரோமிய கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் மில்லை கலந்தாஎடுக்கவில்லை என சீமான் கூறினார்

Update: 2021-09-29 05:45 GMT

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

இராணிப்பேட்டை சிப்காட்டில் 2.5 லட்சம் டன் குரோமிய கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையுமில்லை என்று வேட்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டத்தில் சீமான் பேசினார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க உள்ள  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்   நாம்தமிழர் கட்சி  வேட்பாளர்கள் கலந்தாய்வுகூட்டம்,   இராணிப்பேட்டை திருமணமண்டபத்தில் நடந்தது . கூட்டத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், 50ஆண்டுகளாக மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை யாரும் ஏற்படுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிவது இனிப்பானது தான், மாறாக குறைந்த கட்டணங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கும் சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்..

தனியார்தொழிற்சாலைகளின் கழிவுநீரால் வளமிக்க ஆறுகள் செத்துக் கொண்டிருக்கிறது. இராணிப்பேட்டையில் தேங்கிக்கிடக்கும் 2.5லட்சம் டன் குரோமியக்கழிவுகளை அகற்ற இதுவரை எந்தநடவடிக்கையும் இல்லை. மக்களின் பிரச்சினைக்காக நாம் தமிழர் கட்சி உழைக்கும். தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்து அல்ல என்று இவ்வாறுஅவர் பேசினார்.

Tags:    

Similar News