கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையை பெற்றுதரக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வாலாஜாப்பேட்டை அடுத்த வீராணம்அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையினை பெற்று தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் , விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2021-07-05 17:18 GMT

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்க கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ,அடுத்த மேல் வீராணம் ,பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது..

அதில்,  சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் , அறுவடை செய்த சுமார்12, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை ,கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து  கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அவற்றிற்கான கணக்கு ரசீது, விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் அவர்களை கொள்முதல் நிலைய பணியாளர்கள் அலைக்கழித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளது .அவை ,  அனைத்தும் வெயில் மற்றும் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் மன வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

எனவே விவசாயிகள் ,  கொள்முதல் செய்தவற்றிற்கான ரசீது மற்றும் தொகை ஆகியவை பெற்றுதர வேண்டியும், ,பாதுகாப்பாற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும். எனக் கோரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தனர்.

Tags:    

Similar News