வாலாஜாப்பேட்டை திருமண மண்டபத்தில் தடையை மீறி நிகழ்ச்சி : ₹7000 அபராதம்

வாலாஜாப்பேட்டை, திருமண மண்டபத்தில் ஊரடங்கு தடையை மீறி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியதாக வட்டாட்சியர், அபராதம் விதித்தார்.

Update: 2021-06-16 18:01 GMT

திருமண மண்டபத்தில் வட்டாட்சியர் போலீசாருடன் சென்று அபராதம் விதித்தார்.

திருமண மண்டபத்தில் தடையை மீறி நிகழ்ச்சி ₹7000 அபராதம்

வாலாஜாப்பேட்டை அடுத்த அம்மூரில் திருமண மண்டபத்தில் ஊரடங்கு தடையை மீறி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியதாக வட்டாட்சியர், ₹7ஆயிரம் அபராதம்  விதித்தார்.


தமிழகத்தில்  , கொரோனாத் தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில்  மாநிலத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்த அரசு தடை வித்துள்ளது.   இந்நிலையில்   இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தடையை மீறி   நிகழ்ச்சியை  நடத்திக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வாலாஜா வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் ஊரடங்கு  தடையை மீறி நிகழ்ச்சி நடத்த அனுமதித்த திருமண மண்டப உரிமையாளருக்கு₹ 7000 ஆயிரம் அபராதமாக விதித்தார். அவருடன் வாலாஜா போலீஸ்  இன்ஸ்பெக்டர பாலு ,எஸ்ஐ பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதே போல் இராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகே அனுமதியின்றி திறந்து வைத்திருந்த 3ஜவுளி கடைகளுக்கும் தலா ₹2ஆயிரம் அபராதமாக ₹6 ஆயிரத்தை வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் விதித்தார்.

Tags:    

Similar News