மேல்நிலை,உயர்நிலைப்பள்ளிகள் நாளை திறக்கத் தயார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை நாளை திறக்க தயார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

Update: 2021-08-31 17:16 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 136 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்  உள்ளது. அவைகள்,சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளிகள் நாளை திறக்க தயார் நிலையில் உள்ளது.

அவைத்தவிர, உள்ள ,மெட்ரிக் ,சிபிஎஸ்இ பள்ளிகள் 91ல் 80 பள்ளிகள் செயல்பட தயார் நிலையில் உள்ளது. 11 பள்ளிகள் திறக்க விருப்பமின்மை தெரிவித்துள்ளனர்.  மாவட்டத்தில் உள்ள 136 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும்  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் 2711ல் சுமார் 2549 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் கர்ப்பிணி மற்றும் தொற்று பாதிப்பு மூன்று மாதம் நிறைவடையாத நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளதாவர்கள்.

அதைப் போல ,தனியார் பள்ளிகளில் சுமார் 2874 பேரில் 2,588 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் , மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலை பள்ளிகளின் மாணவர்கள் 62,749.பேர் தங்கள் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில்  பள்ளிகளுக்கு வரலாம்..

எனவே அனைத்து பள்ளிகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா குறித்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News