வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில் அடக்கம்

கைக்குழந்தையுடன் தவிக்கும் கவுசல்யாவிற்கு தமிழக அரசு உதவிடவேண்டும் என்று பெண்ணகோணம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2021-09-01 17:08 GMT

130 நாட்களுக்கு பெண்ணகோணம் வந்தடைந்த ராஜ் குமாரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம்,  பெண்ணகோணம் கிராத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.இவர் கவுசல்யா என்பவரை திருமணம் முடித்து மூன்றே மாதத்தில் கூலிவேலைக்காக சவுதி நாட்டிற்கு சென்றார்.அவர் வெளிநாடு செல்லும் போது அவரின் மனைவி கவுசல்யா  2 மாத கர்ப்பிணியாக இருந்தார். சவுதி நாட்டில் ஹாலோபிளாக் கம்பெனி ஒன்றில் 19 ஆயிரம் ஊதியத்துக்கு ராஜ்குமார். வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 20 -ஆம் தேதி கம்பெனியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ராஜ்குமார்  உயிரிழந்தார்.அவரின் உடலை மீட்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து அவரின் மனைவி கவுசல்யா,மாவட்ட ஆட்சியர்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் போன்றோரிடம் மனுக் கொடுத்திருந்தார்.இந்த நிலையில் இன்று 130 நாட்களுக்கு பிறகு ராஜ் குமாரின் உடல் விமானம் வழியாக சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் பெண்ணகோணம் வந்தடைந்தது.

ராஜ்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி கவுசல்யாமற்றும் உறவினர்கள் கிராமமக்கள் என அனைவரும் கதறி அழுதனர்.பின்னர் சம்பிராதயங்கள் முடிந்து ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கூலித்தொழிலாளி ராஜ்குமார் உயிரிழப்பிற்கு அவர் வேலைபார்த்த கம்பெனி எந்த உதவியும் செய்யாத நிலையில், அவரை இழந்து கைக்குழந்தையுடன் தவிக்கும் கவுசல்யாவிற்கு தமிழக அரசு உதவிடவேண்டும் என்று பெண்ணகோணம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News