பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-19 15:42 GMT

பெரம்பலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைபாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வன பகுதியில் விட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றியிலும் செடி , கொடி கள் வளர்ந்து புதர் போன்று இருப்பதால் விஷ ஜந்துக்களின் கூடமாக மாறி வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க திரளான பொதுமக்கள் வந்திருந்தனர் . அவர்களில் சிலர் மாவட்ட கருவூலம் எதிரே உள்ள பூங்காவின் மரத்தடியில் அமர்ந்திருந்தனர் . அப்போது ஒரு கல்லுக்கு இடையே சாரை பாம்பு தலையை தூக்கி நின்றுள்ளது,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவலை தீயணைப்பு துறைக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து நவீன கருவிகள் உதவியுடன் சுமார் 7 அடி நீள சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர் . மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Tags:    

Similar News