சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டு

பெரம்பலூரில் காற்றுடன் கூடிய மழையால் சாலையில் நடுவே புளிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

Update: 2021-07-11 15:45 GMT

பெரம்பலூரில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றிய போலீசார்.

பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூரில்  இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் அன்னமங்கலம் பிரிவு ரோடு அருகே இருந்த புளிய மரம் மழையின் காரணமாக சாலையில் விழுந்தது.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து எண்-4 காவல்துறையினர் கொளஞ்சியப்பன் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விக்னேஷ்  மற்றும் பாண்டி,மேலும் குமார், உதவி ஆய்வாளர், காவல் நிலையம் ஆகியோர், மரம் விழுந்த  இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள பொதுமக்களுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு சாலையில் விழுந்த மரத்தினை அப்புறபடுத்தினார்கள். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.  இச்செயலினை கண்ட அங்குள்ள பொது மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்கள்.

Tags:    

Similar News