வேப்பந்தட்டையில் கருணாநிதி பிறந்த நாள் விழா: அரிசி தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ பிரபாகரன்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நடந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ பிரபாகரன் அரிசி தொகுப்பு வழங்கினார்.

Update: 2021-06-04 03:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் எம்எல்ஏ பிரபாகரன் அரிசி தொகுப்பை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக  எம்.எல்.ஏ பிரபாகரன் வேப்பந்தட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அதன் அருகில் உள்ள கொடிமரத்தில் திமுக கொடியேற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பை வழங்கினார்.

Tags:    

Similar News