பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி, அமைச்சர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.

Update: 2021-06-15 08:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். அருகில் எம்எல்ஏ பிரபாகரன்.

பெரம்பலுூர் மாவட்டம்  துறைமங்கலத்தில் கொரோனா நிவாரணம் 2 ஆம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 282 நியாய விலைக் கடைகளில் மூலம் மளிகை தொகுப்பு பொருட்கள் மற்றும் ரூ.2000 நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பெரம்பலூர் வட்டத்தில் 49,759 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 49,172 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், குன்னம் வட்டத்தில் 49,884 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆலத்தூர் வட்டத்தில் 35,878 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தமாக 1,84,693 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.36.95 கோடி மதிப்பீட்டில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகையும், 14 வகையான மளிகை பொட்கள் அடங்கிய தொகுப்புகளும் வழங்கப்பட்ட உள்ளது.

துறைமங்கலத்தில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சி.ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வகுமரன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News