கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்

முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.

Update: 2021-07-24 15:45 GMT

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில்  முககவசம் அணியாமல் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறையினர்.

பெரம்பலூர், நான்கு ரோடு பகுதியில் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள் ஆகியோர்  இன்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் முகக்கவசம் அணியாமலும், கொரோனே விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள்  மற்றும் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

இதில் முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு 200 ரூபாயும், சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதித்தனர். ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தி தற்பொழுது இயல்பு நிலையில் பொதுமக்கள் இருக்கும் சூழ்நிலையில், முககவசம் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே கொரோனோ இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை தொற்று வருவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News