பெண்ணகோணம் ஊராட்சி துணைத்தலைவர், அவரது கணவர் மீது கலெக்டரிடம் சாரமாரி புகார்

பெரம்பலூர் மாவட்டம் பெண்ணகோணம் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

Update: 2021-06-23 14:04 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை பெண்ணகோணம் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு சரமாரிப் புகார் தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள  பெண்ணகோணம் ஊராட்சியை சேர்ந்தவார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இதில் பெண்ணகோணம் ஊராட்சியில் உள்ள 9 வார்டு உறுப்பினர்களின் 1,2,5,6,9 ஆகிய வார்டு உறுப்பினராக இருந்து வரும் எங்களை, பெண்ணகோணம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருக்கும் செல்வராணி மற்றும் அவரது கணவர் செல்வகுமார் ஊராட்சி மன்றதில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் மேலும் எங்கள் வார்டு பகுதியில்நடைபெறும்.

நலத்திட்ட பணிகள் அனைத்தும் அவரே செய்து கொள்வதாகவும், எங்களை எந்த பணியும் செய்ய விடாமல் தடுத்து வருகிறார்,

மேலும் வார்டு உறுப்பினர்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கும் துணை தலைவர் செல்வராணி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுனராக பணிபுரியும் அவரது கணவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என குறிப்பிடப்பட்ட மனு மற்றும் இதேபோன்று தூய்மை பணியாளர்கள், கொடுத்த மனுவில் பெண்ணகோணம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் எங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை மேலும் கொரோனோ காலகட்டத்தில் தெருக்களைசுத்தம் செய்து, வீடுதோறும் சென்று கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,

இதில் தினக்கூலி மற்றும் மாத சம்பளத்தில் வேலை பார்க்கும் எங்களுக்கு சம்பளம் வரவில்லை என ஊராட்சி மன்றத்தில் கேட்டாள் சம்பள வவுச்சரில ஊராட்சி மன்ற துணை தலைவர் கையெழுத்திடாமல் இருப்பதால் வழங்க முடியாது என தெரிவித்து வருகின்றனர்,

மேலும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வராணி கணவர் அரசு அலுவலக ஓட்டுனராக பணிபுரிகிறார் அவர் எங்களிடம் வந்து பணி செய்வது குறித்து அவர் வேலை வாங்குவதோடு தன்னை சார் ஐயா என்று அழைக்க வேண்டும் என சொல்லி வருகிறார் ,

எனவே இப்பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஊராட்சிமன்ற தலைவர் ஆகியோர் மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News