ரூ. 3.25 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கல்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் பெறப்பட்ட மனுக்களில் 277 பேருக்கு ரூ. 3.25 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

Update: 2021-07-16 17:00 GMT

நலதிட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்.

குன்னம் தொகுதியில் உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது, 263 பேருக்கு ரூ.3.11 கோடிமதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 14 , முஸ்லிம் மகளிருக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பிலும் மொத்தம் 277 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

இதனை தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் தீர்வு கானும் வகையில் தனி ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மூலமாக முதலமைச்சர் உங்களின் கோரிக்கைளை நிறைவேற்றி வருகிறார். முதலமைச்சர் என்பவர் தலைமை செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யாமல், அவரே மனுக்களை நேரடியாக பெற்று வருகிறார். மக்கள் குறைகளை தீர்த்து வருகிறார் தமிழக முதல்வர் என்று பேசினார்.

பேரளி கிராமத்தைச் சேர்ந்த தாய், தந்தையை இழந்து தாத்தாவின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் பிரதாப், பிரகாஷ் ஆகியோர் அமைச்சரிடம் உதவி கோரினார்கள். அமைச்சர் உடணடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் ஆட்சியர் வெங்கட்பிரியா விடம் கூறினார். மேலும் விவசாயி ஒருவருக்கு ரூ.1 லட்சத்து10 ஆயிரம் மதிப்புள்ள களையெடுக்கும் கருவியையும் அமைச்சர் வழங்கினார்.

Tags:    

Similar News