பெரம்பலூர்: உண்டு உறைவிடப்பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு

பேரளியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை, பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா ஆய்வு செய்தார்.

Update: 2021-09-17 05:30 GMT

பேரளியில் உள்ள, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட, மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், பேரளியில் உள்ள, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை,  மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் குறித்தும், அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் குறித்தும், ஆட்சியர் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்திற்குள் கொரானா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும், நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர் .மஞ்சு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News