அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 5 பேர் கைது

பெரம்பலூர் அருகே அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டி, மணலை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-07 15:33 GMT
மாட்டு வண்டியில் மணல் கடத்தல் ( பைல் படம்)

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி வ.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயராமனுக்கு கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மண்ல் கடத்தலை கண்டுப்பிடிக்க காவலர்களுடன் சென்றார்.

அப்போது  பாண்டகப்பாடியிலிருந்து  பசும்பலூர் செல்லும் சாலையில் பிம்பலூர் மண் ரோட்டில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த  ராமகிருஷ்ணன் , சாமிகண்ணு , பெரியசாமி, கலியமூர்த்தி, கந்தசாமி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டியுடன் ரூபாய் 2500/- மதிப்புள்ள மணலை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ௫ பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வ.களத்தூர்  போலீசார்  நீதி மன்றத்தில் ஆஜர் செய்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News