விவசாய குறை தீர் கூட்டம்: நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த விவசாயிகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த விவசாயிகள்.

Update: 2021-07-30 10:30 GMT

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அமர்வதற்கு நாற்காலி இல்லாததால் தரையில் அமர்ந்த விவசாயிகள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நீண்ட நாட்களுக்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விவசாயிகள் அமர்வதற்கு நாற்காலி இல்லாத காரணத்தால், விவசாயிகள் தரையில் அமர்ந்தும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தங்களுடைய குறைகளை தெரிவிக்க வந்த விவசாயிகளுக்கு வேதனையாகவே இருந்தது.

மேலும் கூட்டம் நடைபெறும் போது ஒரு சில அதிகாரிகள் மொபைல் மோகத்தால் செல்போனை பார்த்தும் , விவசாயிகள் குறைகளை செவி கொடுத்து கேட்காமல் இருந்துள்ளனர். மேலும் தாமதமாக அமர்வதற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளின் அலட்சியமான பேச்சால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News