பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்க்குடிகாடு பேரூராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-27 06:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

லப்பகை்குடிகாடு பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ,அந்தப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

பின்னர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு சென்ற அமைச்சர் மருத்துவர்களிடம், தடுப்பூசி போடும் பணிகளையும்,தினமும் எவ்வளவு பேர் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்றும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,லப்பைகுடிகாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையநத்திற்கு சென்று அங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்பு லெப்பைக்குடிக்காடு பகுதியின் நெடுநாள் பிரச்சனையான கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது  பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஸ் கிருஷ்ணன் ஆகியோர்  உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் கொரோனா தொற்றால் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு தாம் முதன் முறையாக ஆய்வு பணியை மேற்கொண்டதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

Heading

Content Area


Similar News