நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,450 போலீசார்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பாதுகாப்பு பணியில் 1,450 போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Update: 2022-02-16 10:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய, 5 நகராட்சிகளில் உள்ள 151 வார்டுகள், 19 டவுன் பஞ்சாய்த்துக்களில் உள்ள 288 வார்டுகள் என, மொத்தம் 439 வார்டுகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவிற்காக, நாமக்கல் நகராட்சியில் 109 ஓட்டுச்சாவடி, ராசிபுரத்தில் 51, திருச்செங்கோட்டில் 88, பள்ளிபாளையத்தில் 44, குமாரபாளையத்தில் 73 என, மொத்தம் 365 ஓட்டுச்சாவடிகள், 19 டவுன் பஞ்சாயத்துக்களில் 324 ஓட்டுச்சாவடிகள் என, மொத்தம் 689 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவின்போது 1,450 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாதுகாப்பு பணிக்காக 120 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நகராட்சி பகுதிகளுக்கு 28, டவுன் பஞ்சாயத்துக்களுக்கு 32 என, மொத்தம் 51 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 74 ஓட்டுச்சாவடிகள் பதற்றமான ஓட்டச் சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஓட்டுப்பதிவு முழவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். 

Tags:    

Similar News