நாமக்கல்லில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்

நாமக்கல்லில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், 844 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

Update: 2022-09-05 10:45 GMT

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம் கார்டுகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம் கார்டுகளை, 844 மாணவிகளுக்கு வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

நிகழ்ச்சியில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, முன்னாள் எம்.பி சுந்தரம், நகராட்சி துணைத்தலைவர் பூபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், கிருஷ்ணலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்தன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News