நாமக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் குருணை அரிசி ஏலம்

நாமக்கல் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 17.35 டன் அரிசி குருணை வருகிற 27ம் தேதி ஏலம் விடப்படும் என கலெக்டர் அறிவிப்பு.

Update: 2021-08-25 04:17 GMT

பைல் படம்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், கணவாய்ப்பட்டி ஆரம்பப்பள்ளி அருகில், கடந்த 2020ம் ஆண்டு செப்.6ம் தேதி ரேசன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர், குழுவினருடன் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜப்பா என்பவரிடமிருந்து 17,350 கிலோ குருணை அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, நாமக்கல் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அரிசி குருணை (பொன்னி கிலோ ஒன்றிற்கு ரூ.30, மற்றும் ஐஆர் 20 கிலோ ஒன்றிற்கு ரூ.35) என மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலம் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் வருகிற 27ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.

ஏலத்தில் பங்கு பெறுவர்கள் முன் வைப்புத் தொகையாக அரிசி குருணை மதிப்பில் 10 சதவீத தொகையினை 26ம் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் முடிந்த பின் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்புத் தொகை அன்றே திரும்ப அளிக்கப்படும். ஏலம் எடுத்தவர்கள், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி குருணை, அதன் தரம், அன்றைய தேதியில் உள்ள நிலையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News