நாமக்கல்லில் போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

நாமக்கல்லில் போலீஸ் மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-08 00:15 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், மாவட்ட சிஜேஎம் கோர்ட் நீதிபதி வடிவேல் பேசினார்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி அறிவுறுத்தலின் படி, போலீஸ் மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட சிஜேஎம் கோர்ட் நீதிபதி வடிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், காவல்துறை மற்றும் நீதித்துறை இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது குறித்தும், குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதிகள் செல்வராஜ், விஸ்வநாதன், நந்தினி, கூடுதல் மகிலா கோர்ட் நீதிபதி ஹரிஹரன், சேந்தம் மாஜிஸ்திரேட் ரெகானா பேகம், ராசிபுரம் மாஜிஸ்திரேட் சுரேஷ்பாபு, திருச்செங்கோடு மாஜிஸ்திரேட் மாலதி, குமாரபாளையம் மாஜிஸ்திரேட் விஜயகார்த்திக் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாகிகள், நீதித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News