ஒருவந்தூர்–நெரூர் காவிரி ஆற்றில் தடுப்பணை: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

ஒருவந்தூர் – நெரூர் இடையே காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

Update: 2022-05-02 09:45 GMT

காவிரி ஆறு கோப்புப்படம் 

நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் கிராமசபைக் கூட்டத்தில், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்மணியன் கலந்துகொண்டு, பஞ்சாயத்து தலைவர் அருணாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத்தொடரில், தமிழக அரசு, நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கும், கரூர் மாவட்டம், நெரூருக்கும் இடையே ரூ. 700 கோடி மதிப்பீட்டில், தடுப்பணை அமைக்கப்படும் என்று அறிவித்தது.

ஆனால், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்துவதுடன், மோகனூர் –நெரூருக்கு இடையே என்பதை மாற்றி, ஒருவந்தூர்-நெரூர் இடையே தடுப்பணை அமைக்க கிராம சபை கூட்டத்தின் மூலம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிகளை மேற்கொள்வதால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால், சாகுபடி பாதிக்கப்படுகிறது. அவற்றை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும், விவசாயத்துக்கு பயன்படும் வகையில், 100 நாள் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ள தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பனை, தென்னை மரங்களில் கள் இறக்குவதற்காக விவசாயிகளும், மரம் ஏறும் தொழிலாளர்களும், பல ஆண்டுகாலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு அனுமதிக்கவில்லை. தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்குவதற்கு, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தநது. இதை ஏற்று கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News