சீராப்பள்ளியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

சீராப்பள்ளியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் அலுவலம் வந்த பொதுமக்கள்.

Update: 2021-10-04 10:00 GMT

டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க அனுமதி மறுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்.

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம், சீராப்பள்ளி பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, சீராப்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் சீராப்பள்ளியிலிருந்து வடுகம் செல்லும் சாலையில் காட்டுக்கொட்டாய் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க உள்ளதாக தெரிய வருகிறது. இப்பகுதி 1வது வார்டு முழுவதுமாக இந்து மற்றும் கிறிஸ்துவ கோயில்கள் நிறைந்த பகுதியாகவும் விவசாய நிலம் சார்ந்த பகுதியாகவும் உள்ளது. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் சீராப்பள்ளி 1வது வார்டு வழியாகவே சென்று வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், தினசரி காய்கரி மார்கெட்டிற்கு செல்பவர்களும் இவ்வழியையேதான் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்பகுதி தேசிய பறவையான மயில்கள் நிறைந்துள்ள பகுதியாகும். அருகில் ஏரி உள்ளதால் மது அருந்திய பின்னர் தூக்கி எறியும் கழிவுகளால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். விவசாய பெண் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, சீராப்பள்ளி 1வது வார்டில் டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதை தடுத்திடவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News