ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை பாதையை மீட்டுத்தரக் கோரி கலெக்டரிடம் மனு

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நடை பாதையை மீட்டுத் தரக்கோரி கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெரு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்

Update: 2021-08-23 12:30 GMT

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நடை பாதையை மீட்டுத்தரக்கோரி கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெரு மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெரு பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கொண்டமநாயக்கன்பட்டி போயர் தெருவில் நாங்கள் சுமார் 17 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு செல்லும் மாமூல் தடபாத்தியத்தை சுமார் 60 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம்.

இந்த இடத்தை தனிநபர் சுற்றி வளைத்து ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்துள்ளனர். இதனால் நாங்கள் 4 தெருவைச் சுற்றிக்கொண்டு வரவேண்டியுள்ளது.

எங்களுக்கு பாத்தியமான தடத்தில் போக முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். இதுகுறித்து இருமுறை சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே,

கலெக்டர் நேரில் பர்வையிட்டு, எங்களுக்கு சொந்தமான தட நடை பாதையை மீட்டுத்தரவேண்டும், இவ்வாறு அந்த மனுவில்  தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News