நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 எஸ்ஐக்கள் உட்பட 46 பேர் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 16 போலீஸ் எஸ்ஐக்கள் உள்ளிட்ட 46 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-11 04:00 GMT

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் 16 போலீஸ் எஸ்ஐக்கள் உள்ளிட்ட 46 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட 30 காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில், பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., எஸ்எஸ்ஐ, ஏட்டுகள் மற்றும் போலீசார் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி மாவட்டம் முழுவதும் எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் உள்ளிட்ட46 பேர் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எருமப்பட்டி எஸ்.எஸ்.ஐ., கருணாநிதி திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கும், வாழவந்திநாடு எஸ்எஸ்ஐ பாலச்சந்திரன் திருச்செங்கோடு ரூரலுக்கும், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஏட்டு சாந்தகுமாரி திருச்செங்கோடு ரூரலுக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் மகளிர் காவல் நிலைய ஏட்டு பரிமளா பள்ளிபாளையத்துக்கும், செங்கரை ஏட்டு கோபி திருச்செங்கோடு டவுனுக்கும், வெண்ணந்தூர் ஏட்டு ராஜ்குமார் திருச்செங்கோடு ரூரலுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிபாளையம் ஏட்டு மணிகண்டன் வெப்படைக்கும், ப.வேலூர் எஸ்எஸ்ஐ நீலகண்டன் பேளுக்குறிச்சிக்கும், ஜேடர்பாளையம் ஏட்டு குப்புசாமி, போலீஸ் ஜோதிவேல் ஆகியோர் ஆயில்பட்டிக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளன. எஸ்எஸ்ஐக்கள், ஏட்டுகள், போலீசார் உள்ளிட்ட 46 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார்தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News